சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ் - நீலகிரி உதகையில் 2வது மலர் கண்காட்சி தொடக்கம்!சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ் - நீலகிரி உதகையில் 2வது மலர் கண்காட்சி தொடக்கம்!

மலைகளின் அரசி என்று எல்லாராலும் அழைக்கப்படும் நீலகிரி உதகையில் தற்போது 2024ல் 2வது சீசன் தொடங்கியுள்ளதால் 2வது மலர் கண்காட்சி தொடங்கியுள்ளனர்

உதகையில் 2வது மலர் கண்காட்சி 2024

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகையில் அரசு தாவரவியல் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அங்கு சீசனின் டைம் போது மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். ஒவ்வொரு முறை மலர் கண்காட்சி ஆரம்பிக்கும் நாட்களில் இருந்து முடியும் வரை சுற்றுலா பயணிகளின் கூட்டம் அங்கு அலைமோதும்.

அதன்படி கடந்த மே மாதம் 10 தேதி முதல் 20ம் தேதி வரை கிட்டத்தட்ட 10 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மூன்று மாதங்களில் இரண்டாவது சீசன் டைம் ஆரம்பமாக இருக்கிறது. எனவே அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Also Read: தீபாவளி பண்டிகை 2024 – 5975 சிறப்பு ரயில்கள் – மத்திய அமைச்சர் அறிவிப்பு..!

125 ரகங்களை சேர்ந்த 4 லட்சம் மலர் செடிகள் நடைபாதைகளில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 7500 மலர் தொட்டிகளை கொண்டு புல்வெளியில் சந்திராயன் விண்கலம் அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சுற்றுலா பயணிகள் கலந்து கொள்ளும் விதமாக அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் அரசு தாவரவியல் பூங்கா நிர்வாகம் செய்துள்ளது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் எப்போது?

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

மோஹித் சர்மாவை கெட்ட வார்த்தையில் திட்டிய தோனி

பாராசிட்டமால் உள்பட 53 மாத்திரைகள் போலியானவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *