கல்யாணம் செய்ய கோரி பலமுறை டார்ச்சர் செய்தார் என்று பாலியல் புகார் அளித்த பெண் குறித்து ஜானி மாஸ்டர் கூறியிருப்பது சினிமாவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஜானி மாஸ்டர்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் மோஸ்ட் வாண்டட் நடன இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ஜானி மாஸ்டர். இவர் அல்லு அர்ஜுன், தளபதி விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார். அதன்படி அவர் நடனம் வடிவமைத்த புட்ட பொம்மா மற்றும் அரபிக்குத்து மற்றும் ரஞ்சிதமே போன்ற பாடல்கள் இப்பொழுது வரை ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
பாலியல் புகார் – ஜானி மாஸ்டர்
அதுமட்டுமின்றி அவர் நடனத்தை தாண்டி ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் அவரின் டான்ஸ் குரூப்பில் உள்ள ஒரு பெண் நடன கலைஞர் தன்னை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்தார் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஜானி மாஸ்டரை கைது செய்ய நினைத்த போது அவர் தலைமறைவானார். அதன்பிறகு கோவாவில் வைத்து காவல்துறை அவரை அதிரடியாக கைது செய்தது.
இந்நிலையில் ஜானி மாஸ்டரை போலீஸ் விசாரணை செய்ததில் அவர் திடுக்கிடும் வாக்குமூலத்தை கொடுத்துள்ளார். அதாவது தன் மீது அந்த பெண் கலைஞர் கூறியுள்ள அணைத்து குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை.
அந்த பெண்ணை நான் ஒரு நிகழ்ச்சியில்தான் பார்த்துளேன். அவரிடம் அருமையான நடன திறமை இருந்ததால் தான் என்னுடைய உதவி நடன இயக்குனராக நான் சேர்த்துக்கொண்டேன்.
Also Read: சின்னத்திரை சித்ரா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் – மீண்டும் சிக்கலில் சிக்கும் ஹேம்நாத்!
ஆனால் அவர் உதவி இயக்குனர் என்பதை மீறி ஒரு கட்டத்தில் என்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டேன்.
அதில் இருந்து அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன். தற்போது சினிமாவில் நான் பெரும் வளர்ச்சியை சந்தித்து வருகிறேன்.
என் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத யாரோ தான் இந்த சதியில் என்னை சிக்க வைத்துள்ளார்கள்.” எனக் கூறியுள்ளார்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
விஜய்யின் தவெக முதல் மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு?
விஜய்யின் தவெக கட்சி முதல் மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா?
10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித்
ஆர்த்தி மீது போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி