கேப்டன் விஜயகாந்தை திரைப்படங்களில் பயன்படுத்தினால் காப்புரிமை கேட்கமாட்டோம் - பிரேமலதா தகவல் !கேப்டன் விஜயகாந்தை திரைப்படங்களில் பயன்படுத்தினால் காப்புரிமை கேட்கமாட்டோம் - பிரேமலதா தகவல் !

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தை திரைப்படங்களில் பயன்படுத்தினால் காப்புரிமை கேட்கமாட்டோம் என பிரேமலதா விஜயகாந்த் தற்போது தெரிவித்துள்ளார்.

மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திரைப்பட பாடல் மற்றும் போஸ்டர்களை பயன்படுத்தினால் யாரிடமும் காப்புரிமை கேட்க மாட்டோம் என பிரேமலதா விஜயகாந்த் தற்போது தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் அண்மையில் வெளியான தளபதி விஜய் நடிப்பில் உருவான GOAT திரைப்படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் கேப்டன் விஜயகாந்த் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து தற்போது வரும் பல திரைப்படங்களில் கேப்டன் விஜயகாந்தின் பாடல் மற்றும் போஸ்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்தின் பாடல் மற்றும் போஸ்டர்களை பயன்படுத்தினால் யாரிடமும் காப்புரிமை கேட்கமாட்டோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். இதனையடுத்து கேப்டன் எங்களுடைய சொத்தல்ல, அவர் மக்களின் சொத்து என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். Premalatha informed will not ask for copyright Captain Vijayakanth song and posters are used in films

புதிய கார் பந்தய அணியை தொடங்கிய நடிகர் அஜித் – ரசிகர்கள் உற்சாகம் !

அத்துடன் சண்முக பாண்டியன் நடிக்கும் படங்களிலும் கேப்டன் பாடல் இடம்பெறும் என்றார். அந்த வகையில் அண்மையில் லப்பர் பந்து திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்தின் நீ பொட்டு வச்ச தங்கக் குடம் பாடல் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *