வானில் ஓர் அதிசயம்  - 2024 பிடி5 என்ற மினி நிலவு நாளை தென்படும் - நாசா அறிவிப்பு!வானில் ஓர் அதிசயம்  - 2024 பிடி5 என்ற மினி நிலவு நாளை தென்படும் - நாசா அறிவிப்பு!

மினி நிலவு என்ற 2024 பிடி5 விண்கல் நாளை முதல் வானில் தென்படும் என்று நாசா அறிவித்துள்ளது.  

2024 பிடி5 என்ற மினி நிலவு நாளை தென்படும்

பூமியை நிலா சுற்றி வருகிறது என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில் ஒரு விண்கல் ஒன்று தற்போது பூமியை சுற்றி விட்டு செல்ல இருப்பதாக கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி நாசா கண்டறிந்துள்ளது. அதன்படி நாசா அறிவித்தபடியே நாளை செப்டம்பர் 29-ஆம் தேதி முதல் வானில் தோன்ற இருக்கிறது.

மேலும் இந்த விண்கல் நவம்பர் 25-ஆம் தேதி வரை பூமியை சுற்றிவர இருக்கிறது. கிட்டத்தட்ட 55 நாட்கள் சுற்றி வரும் இந்த விண்கல் 33 அடி விட்டம் கொண்டதாக இருக்கும் என்று நாசா கணித்துள்ளது. மேலும் இந்த வின் கல்லுக்கு  ‘2024 பிடி5’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Also Read: IPL: ஐபிஎல்2025ல் வீரர்களைத் தக்கவைப்பதில் சிக்கல்? அணிகளுக்கு பிசிசிஐ போட்ட அதிரடி கண்டிஷன்!

இதனை தொடர்ந்து இந்த விண்கல் பூமியை முழுவதும் சுற்றாது. ஒரு வில் வடிவத்தில் மட்டுமே பூமியை சுற்றி விட்டு, பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேறும் என்று நாசா தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு விண்கல் கடந்த 2006 ஆம் ஆண்டு பூமியின் சுற்றுப் பாதைக்கு வந்து, பூமியை சுற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.  

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

உபியில் கோவில்களில் இனிப்பு பிரசாதத்திற்கு தடை

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ் 

தீபாவளி பண்டிகை 2024 – 5975 சிறப்பு ரயில்கள் – மத்திய அமைச்சர் அறிவிப்பு

பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *