தற்போது மத்திய அரசு சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் 3 மசோதாக்களை கொண்டு வரத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் 3 மசோதாக்களை கொண்டு வரத் திட்டம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஒரே நாடு ஒரே தேர்தல் :
தற்போது வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் 18 சட்டத் திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ள நிலையில் இது தொடர்பான மூன்று மசோதாக்களை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
குழு அமைப்பு :
அந்த வகையில் நாடாளுமன்றம், சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மேலும் இதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த குழு தன் அறிக்கையை கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
முதல் மசோதா :
ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான இந்த மசோதாவிற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். Central Government Plan to bring 3 bills one nation – one election scheme
அத்துடன் லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கான பதவிக் காலங்கள் தொடர்பான ஒரு நிர்ணயிக்கப்பட்ட தேதியை உருவாக்குவது, மேலும் பதவிக் காலங்களில் மாற்றம் செய்வது போன்றவை இந்த சட்ட திருத்தத்தில் அடங்கும்.
இதனைதொடர்ந்து இந்த மசோதா பார்லிமென்டில் நிறைவேறினால் மட்டும் போதும் மாநில சட்டசபைகளின் ஒப்புதல் பெற வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது மசோதா :
அந்த வகையில் லோக்சபா தேர்தல் சட்டமன்ற தேர்தல்களுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்துவது தொடர்பான சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் இந்த மசோதா மாநிலங்களின் நிர்வாகம் தொடர்பானது என்பதால், 50 சதவீத மாநில சட்டசபைகளில் ஒப்புதல் பெற வேண்டும்.
சூலூர் பதப்படுத்தும் மையத்தில் விவசாயிகள் ஓய்வறைக்கு டெண்டர் அறிவிப்பு – முழு தகவல் இதோ !
மூன்றாவது மசோதா :
இதனையடுத்து தற்போது புதுச்சேரி, டில்லி, ஜம்மு – காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்கள் சட்டசபையுடன் கூடியவையாக உள்ளன. அந்த வகையில் இதற்கான மூன்று தனிச் சட்டங்கள் உள்ளன.
மேலும் லோக்சபா மற்றும் சட்டசபைகளுடன் இந்த யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, பதவிக் காலத்தில் திருத்தம் செய்வது போன்றவை தொடர்பாக, இந்த மூன்று சட்டங்களிலும் திருத்தம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.