நடிகர் விஜய்யின் தவெக கொடி விவகாரத்தில் தலையிட முடியாது - இந்திய தேர்தல் ஆணையம் பதில் !நடிகர் விஜய்யின் தவெக கொடி விவகாரத்தில் தலையிட முடியாது - இந்திய தேர்தல் ஆணையம் பதில் !

தற்போது நடிகர் விஜய்யின் தவெக கொடி விவகாரத்தில் தலையிட முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தமிழக வெற்றிக்கழக கொடிக்கு எதிராக அளித்த புகாரில் தேர்தல் ஆணையம் தற்போது பதிலளித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சி ஒன்றை தொடங்கினர்.

அத்துடன் அதன் பிறகு கட்சிக்கான உறுப்பினர் சேர்க்கை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனையடுத்து கட்சியின் கொடி மற்றும் அதிகாரபூர்வ பாடல் போன்றவை தவெக கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜய் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து நடிகர் விஜய் அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக்கழக கொடியில் இரட்டை யானைகளின் நடுவில் வாகை மலர் போன்ற குறியீடுகள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் எங்கள் கட்சிக்கு சொந்தமானது என்றும், தவெக கொடியில் இருந்து யானை சின்னத்தை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாடு ஒரே தேர்தல் 3 மசோதாக்களை கொண்டு வரத் திட்டம் – மத்திய அரசு தகவல் !

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் நடிகர் விஜயின் தவெக கொடியில் யானை சின்னம் இடம் பெற்ற விவகாரத்தில் தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது.

மேலும் கட்சி கொடிகள் மற்றும் அதில் இடம்பெறும் சின்னங்களுக்கு தேர்தல் ஆணையம் எப்போதும் ஒப்புதல் கொடுப்பதில்லை.

அத்துடன் பிற கட்சிகளின் சின்னங்கள் மற்றும் பெயர்கள் பிரதிபலிக்கலாமல் கொடி இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அந்தந்த கட்சிகளின் பொறுப்பு என்று பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ள புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *