வானிலை பற்றி தெரிந்து கொள்ள TN Alert செயலி - முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு!!வானிலை பற்றி தெரிந்து கொள்ள TN Alert செயலி - முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு!!

வானிலை தொடர்பான முன்னறிவிப்புகளை பற்றி மக்கள் உடனுக்குடன்  தெரிந்துகொள்ள TN Alert செயலி உருவாக்கியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வானிலை TN Alert செயலி

தமிழகத்தில் தென் கிழக்கு பருவ மழை இன்னும் சில நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில், அடுத்ததாக வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க இருக்கிறது. இந்நிலையில்  வட கிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பிற அமைச்சர்கள், துறை சார் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல்வர், வானிலை தொடர்பாக கனமழை போன்ற பேரிடர்களை முன்கூட்டியே மக்களுக்கு தெரிவித்து விட்டால் பெரிய அளவிலான சேதங்களை நம்மால் தவிர்க்க முடியும்.

Also Read: மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட் – பள்ளிகளுக்கு  14 நாட்கள் விடுமுறை – எப்போது தெரியுமா?

அந்த வகையில் தற்போது மக்கள் உடனடியாக வானிலை பற்றி தெரிந்து கொள்ளும் விதமாக ஒரு செயலியை உருவாக்கியுள்ளது. அதாவது, வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை, பெறப்பட்ட மழை அளவு, நீர் தேக்கங்களில் உள்ள நீர் இருப்பு ஆகிய தகவல்களை உடனுக்குடன் தமிழில் தெரிந்து கொள்ள தமிழக அரசு TN Alert செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் உடனடியாக தெரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

உபியில் கோவில்களில் இனிப்பு பிரசாதத்திற்கு தடை

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ் 

தீபாவளி பண்டிகை 2024 – 5975 சிறப்பு ரயில்கள் – மத்திய அமைச்சர் அறிவிப்பு

பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *