தற்போது திருப்பதி லட்டு விவகாரம் சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. எனவே முழுமையான அறிக்கை எதுவும் இல்லாத நிலையில் இவ்வளவு அவசரமாக இந்த செய்தியை வெளியிட காரணம் என்ன என்று ஆந்திரா அரசிற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி லட்டு விவகாரம் சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
திருப்பதி லட்டு விவகாரம் :
ஆந்திராவில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் திருப்பதியில் வழங்கப்படும் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கின் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கலக்கப்பட்டதாக சமீபத்தில்
தற்போது ஆளும் கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி இருந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின் உணர்வுகளை ஜெகன் மோகன் தலைமையிலான அரசு புண்படுத்திவிட்டதாக சந்திரபாபு நாயுடு ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.
அத்துடன் இது குறித்து முறையான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து திருப்பதி லட்டில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டது குறித்த ஆய்வறிக்கை ஒன்றை தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டது.
உச்சநீதிமன்றம் கண்டனம் :
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலந்த கலப்பட நெய் தான் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என்பதற்கு எந்த தரவுகளும் இல்லை, tirupati laddu controversy supreme court Condemns Chandrababu Naidu
எனவே முழுமையான அறிக்கை எதுவும் இல்லாத நிலையில் இவ்வளவு அவசரமாக இந்த செய்தியை வெளியிட காரணம் என்ன என்று ஆந்திரா அரசிற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
அத்துடன் கடவுளையாவது அரசியலை விட்டு தள்ளி வையுங்கள் என்றும், திருப்பதி லட்டு விவகாரத்தில் எந்த முறையான ஆதாரமும் இல்லாமல்
ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவசரமாக பொது வெளியில் வந்து குற்றசாட்டு வைத்தது தேவையில்லாத விஷயம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் 3 மசோதாக்களை கொண்டு வரத் திட்டம் – மத்திய அரசு தகவல் !
சிறப்பு குழு விசாரணை :
அந்த வகையில் திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக தேவஸ்தான ஆய்வுகூடத்தில் சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அத்துடன் ஒப்பந்ததாரர்களிடமிருந்து டேங்கர் லாரியில் கொண்டு வரப்படும் நெய் ஆய்வகத்தில் பரிசோதனை மற்றும் தேவஸ்தான சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பிரசாத தயாரிப்புத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.