குரங்கு பெடல் திரைப்படத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது - புதுச்சேரி அரசு அறிவிப்பு !குரங்கு பெடல் திரைப்படத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது - புதுச்சேரி அரசு அறிவிப்பு !

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான குரங்கு பெடல் திரைப்படத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்படும் என புதுச்சேரி மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. kurangu pedal Movie Sankaradas Swamy Award

புதுச்சேரிஅரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் நடத்தப்படும் இந்திய திரைப்பட விழா வரும் அக்டோபர் 4-ம் தேதி தொடங்கி 8-ம் தேதி வரை நடக்கிறது. அந்த வகையில் புதுவை அரசின் சிறந்த திரைப்படமாக சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்காக ‘குரங்கு பெடல்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அலையன்ஸ் பிரான்சே கலையரங்கில் வரும் அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும் விழாவை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்த பிறகு சிறந்த திரைப்படத்துக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதை ‘குரங்கு பெடல்’ திரைப்பட இயக்குநர் கமலக்கண்ணனுக்கு வழங்குகிறார்.

பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகிப் பால்கே விருது – மத்திய அரசு அறிவிப்பு !

இதனை தொடர்ந்து குரங்கு பெடல் திரைப்பட இயக்குநர் கமலக்கண்ணன் சிறப்புரையாற்றுகிறார். அத்துடன் குரங்கு பெடல் திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான திரைப்படமாகும். மேலும் விழா நிறைவில் குரங்கு பெடல் திரைப்படம் திரையிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *