
ஹைதராபாத்தில் நெசவாளி ஒருவர் 200 கிராம் தங்கத்தில் திருமண புடவை நெய்தது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஹைதராபாத்தில் 200 கிராம் தங்கத்தில் செய்த புடவை
கைத்தறி தொழிலுக்கு மிகவும் பெயர் போன இடம் என்றால் அது தெலங்கானா தான். அந்த மாநிலத்தில் திறமையான நெசவாளர்களுக்கு பஞ்சமே இல்லை. அந்த அளவுக்கு துணிகளை அற்புதமாக நெசவு செய்து மக்களிடம் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் திறமையான நெசவாளர்களில் ஒருவர் தான் விஜய் குமார். இவர் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தில் உள்ள சிரிசில்லாவைச் சேர்ந்தவர்.
இந்நிலையில் இவர் தற்போது அவர் தனது அசாத்திய திறமையை வெளிக்காட்டி உள்ளார். அதாவது அவர் இதுவரை துணியில் புடவை நெய்த நிலையில், தற்போது தங்கப் புடவை நெய்து உள்ளார். அதாவது கடந்த 6 மாதங்களுக்கு முன்னர், ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது மகளின் கல்யாணத்திற்கு தங்கப் புடவையை நெய்யுமாறு அந்த நபரிடம் கேட்டுள்ளார்.
Also Read: பிரான்சில் ஒரு ஆணுறை 44 ஆயிரம் ரூபாயா? உலகின் மிக விலையுயர்ந்த கருத்தடை இது தான்!
அவர் கேட்டு கொண்டது போன்றே, 200 கிராம் தங்கத்தை வைத்து சுமார் 5.5 மீட்டர் நீளம் மற்றும் 49 அங்குல அகலம் கொண்ட புடவையை செய்துள்ளார். கிட்டத்தட்ட 10 முதல் 12 நாட்கள் வரை வடிவமைத்து புடவையை நெசவு செய்துள்ளார். கொண்ட இந்த புடவை மொத்தம் 900 கிராம் எடை கொண்டது என்று கருதப்படுகிறது. இந்தப் புடவையின் மதிப்பு ரூ.18 லட்சம் ஆகும். மேலும் இவர் ஏற்கனவே, பாரதம், ராமாயணம், ஸ்ரீ கிருஷ்ணன் படங்கள் ஆகியவற்றை புடவைகள் நெய்து பாராட்டுக்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் எப்போது?
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு