அக்டோபர் 1 முதல் சிலிண்டர் விலை ரூ1903 ஆக உயர்வு - அதிர்ச்சியில் மக்கள்!அக்டோபர் 1 முதல் சிலிண்டர் விலை ரூ1903 ஆக உயர்வு - அதிர்ச்சியில் மக்கள்!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அக்டோபர் 1 முதல் ரூ1903 ஆக  உயர்வு அடைந்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 1 முதல் சிலிண்டர் விலை ரூ1903 ஆக உயர்வு

உலகில் வாழும் மக்களின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக கேஸ் சிலிண்டர் இருந்து வருகிறது. அதே போல் கடைகளுக்கு வர்த்தக எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் உலக மார்க்கெட் நிலவரத்தை பொறுத்து தான் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றம் செய்து வருகின்றனர்.  

அந்த வகையில் இந்த மாதம் சிலிண்டர் விலை குறித்து அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் அக்டோபர் 1 முதல் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 48 ரூபாய் அதிகரித்து தற்போது ரூ. 1,903 ஆக விலை உயர்வு பெற்றுள்ளது.

உதயநிதியின் செயலாளராக பிரதீப் ஐஏஎஸ் நியமனம்? வெளியான முக்கிய தகவல்!

அதே போல்  வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை எந்தவித மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது. கடந்த மாதம் வணிக சிலிண்டர் விலை  38 ரூபாய் அதிகரித்த நிலையில், தற்போது இந்த மாதமும் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.  

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

உபியில் கோவில்களில் இனிப்பு பிரசாதத்திற்கு தடை

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ் 

தீபாவளி பண்டிகை 2024 – 5975 சிறப்பு ரயில்கள் – மத்திய அமைச்சர் அறிவிப்பு

பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *