பிக்பாஸ் வனிதா விஜயகுமாருக்கு விரைவில் 4வது திருமணம் நடைபெற இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
வனிதா விஜயகுமார்:
நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் தான் நடிகை வனிதா. ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்த அவர் ஓரிரு படங்களில் இருக்கும் இடம் காணாமல் போனார். நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அந்த ஷோவில் இருந்து வெளியே வந்த பிறகு வனிதா புதிய தொழில்கள் தொடங்கி பிஸியாக இருந்தாலும் இதற்கிடையில் படங்களிலும் நடித்து வருகிறார். சினிமா துறை அவருக்கு நல்லபடியாக அமைந்தாலும் கூட, ஆனால் திருமண வாழ்க்கையில் சற்று சறுக்கலை சந்தித்து தான் வருகிறார்.
வனிதா விஜயகுமாருக்கு 4வது திருமணம்
அதாவது, வனிதா இதுவரை 3 திருமணங்கள் செய்துள்ளார், ஆனால் அந்த 3 கல்யாணமும் பிரிவில் முடிந்துள்ளது. இதற்கிடையில், அவர் ராபர்ட் மாஸ்டரை காதலித்து வந்தார். ஆனால் அந்த காதலும் கைகூடவில்லை. இந்நிலையில் வனிதா விஜயகுமார் தற்போது 4 வது முறையாக திருமணம் செய்ய இருக்கிறார்.
Also Read: பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் சதீஷ்? அவரே வெளியிட்ட அதிர்ச்சி பதிவு!
அதாவது, ” இதற்கு முன்னர் காதல் செய்த ராபர்ட் மாஸ்டரின் கையை பிடித்துக்கொண்டு கீழே உட்கார்ந்து காதலை வெளிப்படுத்தும் காட்சி போல ஒரு புகைப்படம் வெளியிட்டு, அக்டோபர் 5 என பதிவு செய்துள்ளார். தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் ஒரு பக்கம் இந்த போஸ்ட் படத்தின் ப்ரோமோஷனுக்காக கூட இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
நடிகர் கோவிந்தா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது
ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி
அஜித் மடியில் உட்கார்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா
CWC சீசன் 5 மாதம்பட்டி ரங்கராஜ் நடித்த “மிஸ் மேகி”