கர்நாடகாவில் வாழும் நபர் ஒருவர் என்ஜின் ஆயிலை மட்டும் குடித்து உயிர் வாழும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் என்ஜின் ஆயிலை குடித்து வாழும் நபர்
இந்த உலகில் ஆச்சரியமூட்டும் விஷயங்கள் தொடர்ந்து ஆங்காங்கே நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இருசக்கர வாகனத்திற்கு பயன்படுத்தப்படும் ஆயிலை குடித்து உயிர் வாழும் மனிதனை பற்றி கேள்வி பட்டு உள்ளீர்களா. அவர் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். அதாவது கர்நாடக, சிவமொக்கா பகுதி பானுவார என்ற நகரைச் சேர்ந்தவர் தான் குமார் (45).
இவருக்கு பெற்றோர், உறவினர்கள் என்று யாருமே கிடையாது. சிறு வயது முதல் தனியாக வளர்ந்து வந்த இவர் வயிற்று பசிக்காக, கிடைத்த வேலையை செய்து தனது பசியை போக்கி வந்தார். ஒரு கட்டத்தில் சாப்பிட காசு இல்லாததால் வாகனங்களுக்கு பயன்படுத்திய பழைய ஆயிலை மூன்று வேளையும் குடித்து வாழ்ந்து வந்துள்ளார். நாளடைவில் அவருக்கு அதுவே உணவாக மாறிவிட்டது.
இதை கேட்ட பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து குமார் பேசுகையில், ” நான் ஆயிலை குடித்து வருவது பல பேருக்கு அதிசயமாகவும், நான் போய் சொல்வது போல் தெரியும். இதற்காக நான் பல முறை மற்றவர்களிடம் நேரடியாக ஆயிலை குடித்துக் காண்பித்துள்ளேன். அப்போது என் கஷ்டத்தை புரிந்து கொண்டவர்கள் எனக்கு பணம் கொடுத்து உதவி செய்தனர்.
Also Read: சென்னையில் இலவச ஸ்மார்ட்போன் திட்டம் – யாருக்கெல்லாம் தெரியுமா? தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு !
வேறு உணவோ, குடிநீரோ எடுத்து கொள்ளமல் தொடர்ந்து 25 வருடங்களாக மூன்று வேளையும் ஆயிலை குடித்து வருகிறேன்.
அதுமட்டுமின்றி கடந்த 13 வருடங்களாக சபரிமலைக்கு நான் நடந்து சென்று வருகிறேன்” என்றார்.
இப்படி ஆயிலை குடித்து உயிர் வாழ்ந்து வரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 1 முதல் சிலிண்டர் விலை ரூ1903 ஆக உயர்வு
உதயநிதியின் செயலாளராக பிரதீப் ஐஏஎஸ் நியமனம்?
வானிலை பற்றி தெரிந்து கொள்ள TN Alert செயலி
திருப்பதி லட்டு விவகாரம் சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்