காலாண்டு விடுமுறை 2024 - ஆன்லைன் வகுப்பு எடுத்தால் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!காலாண்டு விடுமுறை 2024 - ஆன்லைன் வகுப்பு எடுத்தால் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தற்போது 2024 ஆண்டுக்கான காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்பு எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் அரசு மாற்று அரசு உதவிபெறும் மற்றும் தனியார் உள்ளிட்ட பள்ளிகளில் சமீபத்தில் காலாண்டு பொதுத் தேர்வு நடைபெற்றது.

காலாண்டு விடுமுறை 2024 ஆன்லைன் வகுப்பு

இதனை தொடர்ந்து கடந்த வாரம் தேர்வு நிறைவடைந்த நிலையில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 7ம் தேதி வரை 9 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் ஒரு சில பள்ளிகளில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தினசரி ஆசிரியர்கள் வகுப்பு நடத்தி வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

ஏற்கனவே விடுமுறை நாட்களில் ஆன்லைன் போன்ற வகுப்புகள் எடுக்க கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கர்நாடகாவில் என்ஜின் ஆயிலை குடித்து வாழும் நபர் – அதுவம் 25 வருசமா மூன்று வேளையும்!!

அதாவது, தற்போது காலாண்டு விடுமுறையில் உள்ள மாணவர்களுக்கு நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும், அப்படி மீறி நடத்தினால் கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

அக்டோபர் 1 முதல் சிலிண்டர் விலை ரூ1903 ஆக உயர்வு

உதயநிதியின் செயலாளராக பிரதீப் ஐஏஎஸ் நியமனம்?

வானிலை பற்றி தெரிந்து கொள்ள TN Alert செயலி

திருப்பதி லட்டு விவகாரம் சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *