தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு - கடிதம் மூலம் அறிவிப்பு !தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு - கடிதம் மூலம் அறிவிப்பு !

விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு, அந்த வகையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறும் இடத்தில் பூமி பூஜை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினர். இதனையடுத்து பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் அதிகாரபூர்வ கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்தார்.

அந்த வகையில் த.வெ.க. முதல் மாநில மாநாட்டுக்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து வி.சாலை எனும் வெற்றிச்சாலையில் விரைவில் சந்திப்போம் என தனது முதல் கடிதம் மூலம் தொண்டர்களுக்கு முறையாக அழைப்பு விடுத்துள்ளார் தவெக தலைவர் விஜய்.

விமானத்தை போல அரசுப்பேருந்தில் ஏர் ஹோஸ்டெஸ் – பயணிகளை கவர மகாராஷ்டிரா அரசு முடிவு !

இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ம் தேதி தவெக மாநில மாநாடு நடைபெற உள்ள இடத்தில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் பூமி பூஜை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில், மாநாட்டுக்கான பந்தக்கால் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *