வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் 2024 - நவம்பரில் தொடக்கம் !வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் 2024 - நவம்பரில் தொடக்கம் !

தற்போது தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் 2024 நடைபெற இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து 18 வயது பூர்த்தி அடைந்த நபர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 18 வயது பூர்த்தியானவர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக வரும் நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். Tamil Nadu electoral roll Special camp 2024 for inclusion of name in voter list

அந்த வகையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு எழுதியுள்ள கடிதத்தில் வரும் நவம்பர் 9, 10, 23, 24 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும், வரும் ஜன.1, 2025 அன்று 18 வயதை பூர்த்தி செய்பவர்கள் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மராத்தி உட்பட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து – மத்திய அமைச்சரவை ஒப்புதல் !

மேலும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெற உள்ளது. அந்த வகையில் அதற்க்கு தேவையான அளவு படிவங்களை வைத்திருக்க அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *