விஜய்யின் தளபதி 69 பட பூஜை விழா - கியூட் புகைப்படங்கள் இதோ!விஜய்யின் தளபதி 69 பட பூஜை விழா - கியூட் புகைப்படங்கள் இதோ!

விஜய்யின் தளபதி 69 பட பூஜை விழா: நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தை இயக்குனர் ஹெச். வினோத் இயக்க போகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் கேவிஎன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மேலும் நான்காவது முறையாக அனிருத் இசையமைக்க உள்ளார் .

இதனை தொடர்ந்து இப்படத்தில் நடிக்கவுள்ள பிரபல நடிகர்கள், நடிகைகள் குறித்து அப்டேட் தொடர்ந்து படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி, பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, நரேன், பிரகாஷ் ராஜ், கவுதம் மேனன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விஜய்யின் தளபதி 69 பட பூஜை விழா

மேலும் சிலர் நட்சத்திரங்கள் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி 69 படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இதில் இந்த பூஜையில் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குனர் ஹெச். வினோத், பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்ட மற்ற டெக்னீஷன்களும் கலந்துகொண்டுள்ளனர்.

சீரியலை விட்டு விலகிய சிறகடிக்க ஆசை “கோமதி பிரியா” – அவரே வெளியிட்ட ஷாக்கிங் பதிவு!

நாளை இப்படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *