ரயில்வே அரசு ஊழியர்களுக்கு வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் அறிவிப்பு குறித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு வருடமும் தீபாவளியை முன்னிட்டு ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பது வழக்கம். அரசு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களிலும் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி வருகிற அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இதனை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,” சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
எனவே அதன்படி, தற்போது ரயில்வேயில் கிட்டத்தட்ட 11.75 லட்சம் ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் லோகோ பைலட்டுகள், மேற்பார்வையாளர்கள், ரயில் பாதை பராமரிப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ரயில் மேலாளர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், மற்றும் பல்வேறு வகை ரயில்வே ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படும்.
தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட திட்டம் – அமைச்சரவையில் எடுக்க போகும் அதிரடி முடிவு!
மேலும் அவர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். இதன் மூலமாக மத்திய அரசுக்கு 2029 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த 15 மாவட்டங்களில் கனமழை
மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசிய வழக்கு
திருமலைக்கு பாதயாத்திரை சென்ற பவன் கல்யாண்
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – ஆன்லைன் வகுப்பு எடுத்தால் நடவடிக்கை