Home » செய்திகள் » வருமான வரி ரீபண்ட் பெற புதிய விதிமுறை – மத்திய நிதி அமைச்சகம் தகவல் !

வருமான வரி ரீபண்ட் பெற புதிய விதிமுறை – மத்திய நிதி அமைச்சகம் தகவல் !

வருமான வரி ரீபண்ட் பெற புதிய விதிமுறை - மத்திய நிதி அமைச்சகம் தகவல் !

தற்போது வருமான வரி ரீபண்ட் பெற புதிய விதிமுறை தொடர்பான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் வரித்தொகையை திரும்ப பெறுவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு எளிய முறையில் தீர்வு காண இந்த புதிய விதிமுறை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்கை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில் செலுத்த தவறியவர்கள், தாமதத்திற்கான சரியான காரணத்தை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம்.

மேலும் தாமதமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள் சுலபமாக ‘ரீபண்ட்’ பெற மத்திய நிதி அமைச்சகம் புதிய விதிமுறையை வெளியிட்டுள்ளது

அந்த வகையில் விபத்து, வெள்ளம், இயற்கை பேரழிவு போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கை ஏற்கப்படும்.

மேலும் இவர்கள் அதிகமாக கட்டிய வரித்தொகையை திரும்ப பெறுவதில் சில நேரங்களில் சிக்கல் ஏற்படும். இதனை தொடர்ந்து இதற்கு தீர்வு காண எளிய விதிமுறை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவு எடுக்கும் அதிகாரம் வருமான வரி ஆணையர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் பரிசீலிக்கும் ‘ரீபண்ட்’ தொகைக்கான வரம்பு 50 லட்சம் ரூபாயிலிருந்து தற்போது 1 கோடிரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்பு 3 கோடி ரூபாய்க்கு அதிகமான ‘ரீபண்ட்’ தொகை பற்றி வருமான வரி வாரியம் பரிசீலித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நடவடிக்கைகளில் அதிகாரிகளே முடிவு எடுக்கலாம்.

இதனை தொடர்ந்து மூன்று கோடி ரூபாய்க்கு அதிகமான ‘ரீபண்ட்’ தொகை மீது முடிவு எடுக்கும் அதிகாரம் முதன்மை தலைமை வருமான வரி ஆணையருக்கு தற்போது வழங்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் – டிசம்பரில் சோதனை ஓட்டம் !

மேலும் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாகவும் 3 கோடி ரூபாய்க்கு குறைவாகவும் இருந்தால், விண்ணப்பங்களை ஏற்க அல்லது நிராகரிக்கும் அதிகாரம் வருமான வரி தலைமை ஆணையர்களுக்கு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

அந்த வகையில் வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட ஆண்டில் 1 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் ‘ரீபண்ட்’ விண்ணப்பங்களை ஏற்க அல்லது நிராகரிக்கும் அதிகாரம் வருமான வரி முதன்மை ஆணையர்கள்/வருமான வரி ஆணையர்களுக்கு வழங்கப்படுகிறது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top