மெரினா விமான சாகச நிகழ்ச்சி 2024: சென்னை மெரினா கடற்கரையில் 92-வது இந்திய வான்படை தினத்தையொட்டி வான்படையின் சாகச நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. எனவே அந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க ஏராளமான சென்னை மக்கள் அலை போல் திரண்டு வந்தனர். மேலும் அரசு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது.
மெரினா விமான சாகச நிகழ்ச்சி 2024
மேலும் இந்த நிகழ்ச்சியை எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க கிட்டத்தட்ட 8000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சி காலை 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மதியம் 1 மணிக்கு முடிந்தது.
மெரினா கடற்கரையில் காலையில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், நிகழ்ச்சி நேரத்தில் அதிக அளவில் வெயில் வாட்டியதால் கலந்து கொண்டதால் குழந்தைகள், சிறுவர்கள், முதியோர் சோர்வடைந்தனர். பலர் மயங்கினர்.
மதுரையில் 4வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி 2024 – பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
குறிப்பாக, இந்த நெரிசலால் கிட்டத்தட்ட 240 பேர் மயக்கம் அடைந்தனர், இதில் பெருங்களத்தூர் சேர்ந்த சீனிவாசன் (52), ஆந்திராவை சேர்ந்த தினேஷ்குமார் (37), திருவொற்றியூர் கார்த்திகேயன் (34), கொருக்குப்பேட்டை சேர்ந்த ஜான் பாபு (56) உள்ளிட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 93 பேர் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாஸ்போர்ட் சேவை வெப்சைட் 4 நாட்கள் இயங்காது
கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அரசு அதிரடி அறிவிப்பு!
ரூ.4000க்கும் மேல மின் கட்டணம் வருதா?