மருத்துவத்திற்கான 2024ம் ஆண்டின் நோபல் பரிசு அறிவிப்பு - முழு தகவல் இதோ !மருத்துவத்திற்கான 2024ம் ஆண்டின் நோபல் பரிசு அறிவிப்பு - முழு தகவல் இதோ !

தற்போது மருத்துவத்திற்கான 2024ம் ஆண்டின் நோபல் பரிசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மைக்ரோ RNA கண்டுபிடித்ததற்காகவும் டிரான்ஸ்கிரிப்ஷனுக்குப் பிறகு மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதற்காகவும் இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவீடன் நாட்டு தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள சோல்னா (Solna) எனும் பகுதியில் உள்ளது ‘கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட்’ எனப்படும் புகழ்பெற்ற மருத்துவ கல்வி நிறுவனம் அமைந்துள்ளது.

இந்த கல்வி நிறுவனம் 50 பேராசியர்களை கொண்ட ‘நோபல் அசெம்பிளி’ (Nobel Assembly) எனும் குழுவானது ஒவ்வொரு வருடமும் மருத்துவ துறையில் மனித இனத்திற்கு பலனளிக்கும் வகையில் கண்டுபிடிப்புகளை செய்த நிபுணர்களுக்கு உலகப்புகழ் வாய்ந்த நோபல் பரிசு எனப்படும் விருதிற்கு தகுதியானவர்களை தேர்வு செய்கிறது.

அந்த வகையில் 2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து மைக்ரோ RNA கண்டுபிடித்ததற்காகவும் டிரான்ஸ்கிரிப்ஷனுக்குப் பிறகு மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதற்காகவும் இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் ஊழியர்கள் 6ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி – வெளியான முக்கிய தகவல்!

மேலும் உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதை விளக்குவதற்கு இவர்கள் இருவரின் கண்டுபிடிப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நோபல் பரிசு கமிட்டி கூறியுள்ளது.

இதனையடுத்து கடந்தாண்டு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு, கொரோனா தடுப்பூசி தயாரிக்க உதவிய கட்டாலின் கரிக்கோ மற்றும் ட்ரூ வைஸ்மேன் ஆகிய இருவருக்கும் இணைந்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *