ஹவுஸ்மேட்ஸ் இடையே கொளுத்தி போட்ட பிக்பாஸ் - கதறி அழுத பெண் போட்டியாளர்.. வீடியோ இதோஹவுஸ்மேட்ஸ் இடையே கொளுத்தி போட்ட பிக்பாஸ் - கதறி அழுத பெண் போட்டியாளர்.. வீடியோ இதோ

பிக்பாஸ் 8 அக்டோபர் 8 ப்ரோமோ வீடியோ: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன் முதலாக தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் வழங்க 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்த  24 மணி நேரத்திற்குள் சாச்சனா வெளியேற்றப்பட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று நடந்த கேப்டன் டாஸ்க் போட்டியில்  தர்ஷிகா வெற்றி பெற்று, முதல் வாரத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்றைக்கான(இரண்டாவது நாளுக்கான) முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அதில்  இந்த சீசன் ஆண்கள் vs பெண்கள் என போய்க்கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஆண்கள் அணியில் இருந்து ஒரு பெண்கள் அணிக்கும், பெண்கள் அணியில் இருந்து ஆண்கள் அணிக்கு ஒருவரும் விளையாட வரவேண்டும் என்றும் அதற்கான போட்டியாளர்களை  தேர்ந்தெடுத்து அனுப்பும்படி, ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் மத்தியில் கொளுத்தி போட்டுள்ளார் பிக்பாஸ்.

இந்தி பிக்பாஸ் 18ல் நுழைந்த தமிழ் பெண் – அந்த பிரபலம் யாருன்னு தெரியுமா?

எனவே இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்ற போது ஜாக்லினிற்கும் சுனிதாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஜாக்குலின் பேச்சுவார்த்தையில் இருந்து விலகி தனியாக கண்கலங்கி அழுகிறார். முதல் ப்ரோமோ வீடியோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *