சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து !சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து !

காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கைதான தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை என நீதிமன்றத்தில் காவல் துறை பதில் அளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் அமைந்துள்ள சாம்சங் நிறுவனத்தில் பணி நேரம் குறைப்பு, ஊதிய உயர்வு, தொழிற்சங்கத்திற்கு அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் கடந்த நான்கு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதக்கது

அந்த வகையில் இந்த குழுவினர் சாம்சங் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அதில் தொழிற்சங்கம் அமைப்பதை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளுக்கும் சாம்சங் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கும் வரை போராட்டம் நடைபெறும் என சிஐடியு அறிவித்து போராட்டத்தை தொடர்ந்து வருகிறது. Samsung workers are not prohibited from protest – Madras High Court order

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை காவல் துறையினர் நேற்று நள்ளிரவு அதிரடியாக கைது செய்தனர். மேலும் போராட்டத்திற்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலும் அகற்றப்பட்டது. இந்த நிகழ்விற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என தற்போது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் குப்பை கொட்டினால் டிஜிட்டல் முறையில் அபராதம் – மாநகராட்சி தகவல் !

அத்துடன் சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்ததை தொடர்ந்து தொடர் போராட்டத்தில் கைதான தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை என நீதிமன்றத்தில் காவல் துறை பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *