தவெக தலைவர் விஜய் ஆயுத பூஜை வாழ்த்து - முழு தகவல் இதோ !தவெக தலைவர் விஜய் ஆயுத பூஜை வாழ்த்து - முழு தகவல் இதோ !

தற்போது தவெக தலைவர் விஜய் ஆயுத பூஜை வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காததால் இந்து முன்னணி அமைப்பினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனையடுத்து ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜைக்கு தற்போது விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. tvk president Vijay ayudha pooja 2024 Wishes

தமிழ்நாடு முழுவதும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி விழாவானது கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாட்களின் போது மக்கள் அனைவரும் தங்களின் வீடுகள், வேலை செய்யும் நிறுவனங்கள், கடைகள், வாகனங்கள் என அனைத்தையும் தூய்மைப்படுத்தி அதனை மலரால் அலங்கரித்து இறைவனை வழிபாடு செய்கின்றனர். ayudha pooja 2024 Wishes

இந்த நிலையில் ஆயுத பூஜை மற்றும் விஜசதசமிக்கு தலைவர்கள் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எனப் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். tvk president Vijay

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், “தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயன்படுத்து வாகனங்களையும்,

அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிப்படும் ஆயுதபூஜௌ சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய திருநாள்களில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து புதிய முயற்சிகளும் வெற்றிபெற இனிய வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் அரசியல் வருகைக்குப் பிறகு பண்டிகை காலங்களில் மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். ayudha pooja 2024

ஆனால் அவர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காததால் இந்து முன்னணி அமைப்பினர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இதனையடுத்து ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜைக்கு தற்போது விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *