சபரிமலை ஆன்லைன் புக்கிங் 2024: உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் கேரளாவில் அமைந்துள்ளது. மேலும் இந்த கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
சபரிமலை ஆன்லைன் புக்கிங் 2024
குறிப்பாக கார்த்திகை மாதம் தான் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். எனவே கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த மண்டல காலத்தில் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் இந்த ஆண்டு மண்டல கால பூஜைகள் வருகிற நவம்பர் 16 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. எனவே, நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தினந்தோறும் 80 ஆயிரம் பேரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2025 வெளியீடு – அன்பில் மகேஷ் அறிவிப்பு!
சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு உடனடி டிக்கெட் பெறும் திட்டம் இருக்காது. அதுமட்டுமின்றி மாலை அணிந்து, விரதம் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் ஐயப்பனை தரிசிக்காமல் செல்ல மாட்டார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
விஜய்யின் TVK கட்சியில் சேர்ந்த Mr.கிளீன்
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் 2024
விமான சாகச நிகழ்ச்சி விவகாரம் 2024 – மவுனம் கலைத்த தமிழக முதல்வர்
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!