‘சூர்யா 45’ படத்தை இயக்கும் RJபாலாஜி: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் சூர்யா. தற்போது இவர் சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 14ம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது.
‘சூர்யா 45’ படத்தை இயக்கும் RJபாலாஜி
இதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் சூர்யா. இந்த நிலையில் சூர்யாவின் 45வது படம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஆர்.ஜே.பாலாஜி இயக்க இருப்பதாக இணையத்தில் வெளியாகி வந்தது. சமீபத்தில் கூட லொகேஷன் பார்த்து வரும் புகைப்படத்தையும் ஆர் ஜே பாலாஜி பதிவிட்டிருந்தார். இப்படி இருக்கையில் ஆர் ஜே பாலாஜி – சூர்யா படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா தம்பி பாலா கைது – எதற்காக தெரியுமா?
இதை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கும் ணியில் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் இப்படத்திற்கான பூஜை இன்று (அக்.,14) நடைபெற்றது. படப்பிடிப்பு நவம்பரில் துவங்குகிறது. ஆர் ஜே பாலாஜி இதற்கு முன்னர், மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
அப்போ குழந்தை நட்சத்திரம்.., ஆனா இப்போ தேசிய விருது வெற்றியாளர்
மச்சினிச்சியுடன் சேர்ந்து நடித்த அஜித் – எந்த படத்தில் தெரியுமா?
சிறகடிக்க ஆசை வெற்றி வசந்துக்கு திருமணம்? பொண்ணு இந்த சீரியல்