சென்னையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை-எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்’ என கூறியுள்ளார். Chief Minister Stalin announcement
அம்மா உணவகங்களில் இலவச உணவு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
காற்றழுத்த தாழ்வுப் பகுதி :
தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், தேனி ஆகிய 10 மாவட்டங்களிலும் மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச உணவு :
இதனையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். chennai Free food in amma unavagam
மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் 180 வெள்ள அபாய பகுதிகள் – மாநகராட்சி உத்தரவு !
இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை-எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்’ என கூறியுள்ளார்.