சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன் ? - வானிலை ஆய்வு மையம் விளக்கம் !சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன் ? - வானிலை ஆய்வு மையம் விளக்கம் !

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து சென்னைக்கு ரெட் அலர்ட் ஏன் ? என்று தமிழகத்தின் வானிலை நிலவரம் தொடர்பாக வானிலை ஆய்வாளர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்.

தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. அந்த வகையில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இதனை தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வடதமிழகம் மற்றும் புதுவைக்கும் – நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகே கரையை கடக்கக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் கடலில் தான் இருக்கிறது. அத்துடன் இன்னும் வலுவிழக்கவில்லை என்றும் கரையை நோக்கி வருகிறது. red alert for heavy rain in Chennai – Meteorological Center Explanation

அந்த வகையில் நாளை காலை கரைக்கு அருகில் வரும்போது மழை பெய்ய வாய்ப்பு இருக்கக்கூடிய காரணத்தைக் கருத்தில் கொண்டு, ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகை அபேஸ் – கைவரிசையை காட்டிய  பணிப்பெண்!

மேலும் ரெட் அலெர்ட் என்பதற்கு எல்லா இடங்களிலும் 20 செ.மீ மழை பெய்யும் என்பதில் அர்த்தமில்லை. கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என்றும்,

மழைக்கு மட்டுமல்ல, அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்து தான் ரெட் அலர்ட் போன்றவை விடுக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *