"லப்பர் பந்து" அக்டோபர் 18ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் - OTTயில் சிக்ஸர் அடிக்குமா?  "லப்பர் பந்து" அக்டோபர் 18ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் - OTTயில் சிக்ஸர் அடிக்குமா?  

“லப்பர் பந்து” அக்டோபர் 18ம் தேதி ஓடிடியில் ரிலீஸ்: அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பர் 20ந் தேதி தியேட்டரில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது. கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார்  தமிழரசன் பச்சமுத்து.

“லப்பர் பந்து” அக்டோபர் 18ம் தேதி ஓடிடியில் ரிலீஸ்

மேலும் இந்த படத்தில், சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கிரிக்கெட்டில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் இருவருக்கும் ஏற்படும் ஈகோ தான் படத்தின் கதை. குறிப்பாக அட்டக்கத்தி தினேஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

குறிப்பாக வெற்றிமாறன், பா. ரஞ்சித், சிவகார்த்திகேயன், இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி போன்றோர் மனதாரப் பாராட்டினார்கள். இப்படி தற்போது வரை தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இதுவரை 30 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது.  

ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் தேதி மாற்றம் – எப்போது தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்நிலையில் லப்பர் பந்து படம்  ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தற்போது  தகவல் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 18ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அப்போ குழந்தை நட்சத்திரம்.., ஆனா இப்போ தேசிய விருது வெற்றியாளர்

மச்சினிச்சியுடன் சேர்ந்து நடித்த அஜித் – எந்த படத்தில் தெரியுமா?  

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்துக்கு திருமணம்? பொண்ணு இந்த சீரியல்

GOAT பட நடிகர் ஜெயராம் மகனுக்கு திருமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *