Home » செய்திகள் » ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி –  விரைவில் பாமாயில் துவரம் பருப்பு? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி –  விரைவில் பாமாயில் துவரம் பருப்பு? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி -  விரைவில் பாமாயில் துவரம் பருப்பு? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

தீபாவளி 2024 ரேஷன் கடைகளில் பாமாயில் துவரம் பருப்பு: தமிழகத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்காக  அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படுகிறது. இதன் மூலம் பெரும்பாலான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக பாமாயில் மற்றும் துவரம் பருப்பு போன்ற பொருட்கள் மக்களுக்கு சரிவர கிடைக்கவில்லை என புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.

அதன்பின்னர் தமிழக அரசு சார்பாக துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு ரேஷன் கடையில் தங்கு தடையின்றி துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் சக்கரபாணி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தீபாவளி இன்னும் சில நாட்களில் வர இருக்கும் நிலையில் இன்னும் சில கடைகளில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொடுக்கப்படவில்லை என்று பாஜக கோயம்புத்தூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். அவர் என்னுடைய அறிக்கையை சரியாக படிக்கவில்லை என்று தெரிகிறது.

புதிய நீதி தேவதை சிலை திறப்பு – என்னென்ன மாற்றங்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!

அக்டோபர் மாதத்திற்கான துவரம் பருப்பு 20 ஆயிரத்து 751 மெட்ரிக் டன்னாக ஒதுக்கீடு செய்த நிலையில் 15.10.2024 அன்று 9 ஆயிரத்து 461 மெட்ரிக் டன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார். அதே போல்  2 கோடியே 4 லட்சத்து 8 ஆயிரம்  பாமாயில் பாக்கெட்கள் ஒதுக்கீட்டில் 97 லட்சத்து 83 ஆயிரம் பாக்கெட்கள் விநியோக பட்டுவிட்டன. மீதி விரைவாக விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2025 வெளியீடு

பிரதமர் மோடியின் இன்டெர்ன்ஷிப் திட்டம் – 1.55 லட்சம் பேர் விண்ணப்பம் !

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – சென்னைக்கு ரெட் அலெர்ட் ?

சபரிமலைக்கு போகும் பக்தர்களே –  இந்த ஆண்டு ஆன்லைன் பதிவு கட்டாயம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top