தற்போது BSNL VIASAT சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் நெட்வொர்க் மற்றும் வன்பொருள் ஏதுமின்றி செயற்கைக்கோள் வாயிலாக செல்போன், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் கார்கள் போன்றவைகள் நேரடி சேவைகளை பெறலாம். BSNL VIASAT Trial Test Success
BSNL VIASAT சோதனை வெற்றி
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
BSNL VIASAT :
செயற்கைக்கோளில் இருந்து நேரடியாக செல்போன் போன்ற தனிப்பட்ட சாதனங்களுக்கு இணைப்பு வழங்குவதை, பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் இணைந்து வயாசாட் நிறுவனம் தற்போது வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
வயாசாட் நிறுவனம் தகவல் :
இந்த திட்டத்தின் அடிப்படையில் மண்டல நெட்வொர்க் இணைப்பு ஏதுமின்றி இருவழி தகவல் மற்றும் அவசரகால அழைப்பான் எஸ்.ஒ.எஸ் ஆகியவற்றை செயற்கைக்கோளுக்கு அனுப்பி சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் மூலம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் நெட்வொர்க் இணைப்பு இல்லாமல் ஏறத்தாழ 36,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘எல் பேண்டு’ செயற்கைக்கோளுடன் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டது.
அந்த வகையில் இந்த சோதனையின் முடிவில் பிரத்யேகமாக வன்பொருள் ஏதும் இல்லாமல் செயற்கைக்கோள் சேவைகளை நேரடியாக வழங்குவது சாத்தியம் என்று தெரிய வந்துள்ளது. BSNL VIASAT Trial Test Success – direct service from satellite
மேலும் வயாசாட் செயற்கைக்கோள் நெட்வொர்க்கை பயன்படுத்தி இந்திய நுகர்வோர் மற்றும் வணிகங்களுக்கு தகவல் தொடர்பு சேவை வழங்க துல்லியமாக வழங்க இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம் – ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!!
இதன் அடிப்படையில் நெட்வொர்க் மற்றும் வன்பொருள் ஏதுமின்றி செயற்கைக்கோள் வாயிலாக செல்போன், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் கார்கள் போன்றவைகள் நேரடி சேவைகளை பெறலாம். BSNL VIASAT Trial Test
மேலும் தொழிலக இயந்திரங்கள், பயண ஏற்பாட்டாளர்கள் செயற்கைக்கோள் சேவையை பிரத்யேக வன்பொருள் இல்லாமல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பம் வாகனங்கள் உள்ளிட்ட பல துறைகளில் பாதுகாப்பை அதிகரிக்க உதவும்.