2024 தீபாவளிக்கு மறுநாள் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!2024 தீபாவளிக்கு மறுநாள் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1 அரசு ஊழியர்களுக்கு விடுமுறை: இந்த வருடம் 2024 தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31ம் தேதி(வியாழக்கிழமை) மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு முதல் நாள் அக்டோபர் 30ம் தேதி அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1 அரசு ஊழியர்களுக்கு விடுமுறை

ஆனால், தீபாவளி தினத்திற்கு மறுநாள் வெள்ளிக்கிழமை வேலை நாளாக இருப்பதால் அரசு ஊழியர்கள் வருத்தத்தில் இருந்து வந்தனர். ஏனென்றால், வெள்ளிக்கிழமை வேலை நாள் என்பதால் தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளியூர் செல்பவர்கள் அன்றைய தினம் இரவே கிளம்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதனால் தீபாவளி அன்றே மீண்டும் ஊருக்கு கிளம்பும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கினால், சனி, ஞாயிறு விடுமுறையை சேர்த்து மொத்தம் 4 நாள் விடுமுறை கிடைக்கும்.

தேனி கும்பக்கரை அருவியில் (19.10.2024) குளிக்க அனுமதி – வனத்துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

எனவே நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே அரசு ஊழியர்களின் கோரிக்கை படி அன்று விடுமுறை அளித்து, அந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக  நவம்பர் 9ம் தேதி பணி நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி – மீண்டும் அரங்கேறும் சோகம்!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024 – 46 ரன்னுக்கு 9 விக்கெட் 

ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி

புதிய நீதி தேவதை சிலை திறப்பு – என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *