தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களுக்கு கனமழை: வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் நாளை (22ம் தேதி) தாழ்வு மண்டலமாக மாற இருக்கிறது. இந்த நிலையில், வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களுக்கு கனமழை
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுசேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் தொடர்ந்து இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் இன்று கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், திருவண்ணாமலை மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தீபாவளிக்கு முதல் நாள்(30.10.2024) பொது விடுமுறை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு?
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. weather report news in tamil
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி – மீண்டும் அரங்கேறும் சோகம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024 – 46 ரன்னுக்கு 9 விக்கெட்
ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி
புதிய நீதி தேவதை சிலை திறப்பு – என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?