9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை: சமீபத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து தமிழகம் உட்பட சில மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை
மேலும் மழை அதிகமாக பெய்யும் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குறைந்த காற்றழுத்த மண்டலம் தற்போது டானா புயலாக வலுப்பெற்ற நிலையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் பகுதியை கடந்து செல்ல இருக்கிறது.
இந்நிலையில் சென்னை வானிலை மையம் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து அறிக்கை வெளியாகியுள்ளது.
தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர் – முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!
அதாவது, கிழடுக்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க ஏலம் அறிவிப்பு
தமிழகத்தில் மதுக் கடைகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை
இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்