பெங்களூரு கட்டிட விபத்து விவகாரம்: தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஒரு சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில், நீர் தேங்கி இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
பெங்களூரு கட்டிட விபத்து விவகாரம்
அந்த வகையில் சமீபத்தில் பெங்களூருவில் இருக்கும் பாபுசாபால்யா என்ற இடத்தில் புதிதாக 4 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்த நிலையில் திடீரென இடிந்து சுக்குநூறாகியது. இந்த விபத்தில் கட்டிடத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் 8 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுவரை இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா இழப்பீடு வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பெங்களூரு கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் ஏற்பட்ட சத்தம் – தெறித்து ஓடிய ஊழியர்கள் – என்ன நடந்தது?
அதே போல் பெங்களூரு மாநகராட்சி சார்பில் ரூ.3 லட்சமும், தொழிலாளர் வாரியத்தில் இருந்து ரூ. 2 லட்சமும் என ரூ. 5 லட்சமும் நிதி வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி முதல்வர் சித்தராமையா சம்பவ இடத்திற்கு சென்ற அவர் பார்வையிட்ட பின்னர் மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர் – முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!
தவெக மாநாட்டில் தமிழ்த்தாய்க்கு கட் அவுட் – முழு தகவல் இதோ !
2025 ஏப்ரல் முதல் சென்னையில் மின்சார பேருந்துகள்
பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம்