தவெக மாநாட்டில் பட்டாசு வெடிக்க தடை - தொண்டர்களுக்கு தலைமை உத்தரவு !தவெக மாநாட்டில் பட்டாசு வெடிக்க தடை - தொண்டர்களுக்கு தலைமை உத்தரவு !

நாளை மறுநாள் நடைபெற உள்ள தவெக மாநாட்டில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கபட்டுள்ளது. காவல் துறையின் உத்தரவை தொடர்ந்து பட்டாசு வெடிக்க கூடாது என்று தவெக தலைமை தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினர். அந்த வகையில் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சிக்கான அதிகாரபூர்வ கொடி மற்றும் பாடல் போன்றவை அறிமுகப்டுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலையில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாடு வரும் 27.10.2024 ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து மாநாட்டிற்கான பணிகள் ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

மேலும் காமராஜர், பெரியார் மற்றும் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் கட் அவுட் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் வரும் 27.10.2024 ஞாயிற்று கிழமை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலையில் நடைபெறும் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பட்டாசு வெடிக்க கூடாது என்று காவல்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் காவல் துறையின் உத்தரவை தொடர்ந்து பட்டாசு வெடிக்க கூடாது என்று தவெக தலைமை தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *