Home » செய்திகள் » நெருங்கும் தவெக முதல் மாநாடு – தொண்டர்களுக்கு தலைவர் விஜய் எழுதிய பரபரப்பு கடிதம் – என்ன சொன்னார் தெரியுமா?

நெருங்கும் தவெக முதல் மாநாடு – தொண்டர்களுக்கு தலைவர் விஜய் எழுதிய பரபரப்பு கடிதம் – என்ன சொன்னார் தெரியுமா?

நெருங்கும் தவெக முதல் மாநாடு - தொண்டர்களுக்கு தலைவர் விஜய் எழுதிய பரபரப்பு கடிதம் - என்ன சொன்னார் தெரியுமா?

தவெக முதல் மாநாடு தலைவர் விஜய் 3வது கடிதம்: நடிகர் விஜய் சமீபத்தில் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வருகிற அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  மாநாடு பணிகள் 90 சதவீதம் முடிந்த நிலையில், தற்போது த.வெ.க. தலைவர் விஜய் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தவெக முதல் மாநாடு தலைவர் விஜய் 3வது கடிதம்

அதில் அவர் கூறியிருப்பதாவது, ”  நம் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றி கொள்கைத் திருவிழாவிற்காக நான் எழுதும் மூன்றாவது கடிதம் இது. இன்னும் சில நாட்களில் மாநாடு நிகழப் போகும் தருணம். நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது. எனவே உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்க போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பல மடங்கு கூட்டப் போகின்றன.

அது எப்படி வார்த்தைகளால் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு. மேலும் உலகமே உற்று நோக்கிப் போற்றி கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை. எனவே அத்திருவிழாவைக் கொண்டாட வரும் தொண்டர்கள் பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வாருங்கள்.

TVK மாநாட்டில் 5 ஆண்டுக்கு கொடி பறக்கணும் – விவசாயிடம் தவெகவினர் ஒப்பந்தம்!

உங்கள் பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். மேலும் மாநாட்டிற்கு வருபவர்களை என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன். வாருங்கள். மாநாட்டில் கூடுவோம். 2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம். வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம்.வெற்றி நிச்சயம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top