நியூசிலாந்து 2வது டெஸ்ட் போட்டி: இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. புனே ஆடுகளத்தின் பொதுவாக சுழற் பந்து வீச்சுக்கு சாதகமானது என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.
நியூசிலாந்து 2வது டெஸ்ட் போட்டி
அதை சாதகமாக பயன்படுத்தி வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட் வீழ்த்த 259 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதில் கான்வே (76), ரச்சின் ரவீந்திரா (65) சிறப்பாக விளையாடினார். இதனை தொடர்ந்து, இந்தியா தங்களது முதல் இன்னிங்சை தொடங்கியது. இதில் கேப்டன் ரோகித் சர்மா விக்கெட்டை சவுத்தி டக் அவுட் ஆக்கினார்.
அதன்படி நேற்று நடந்த முதல் ஆட்ட முடிவில் 11 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 16 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு களமிறங்கிய ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும், சுப்மன் கில் 10 ரன்களுடனும் நிதானமாக விளையாடி வந்தனர். இதையடுத்து சுப்மன் கில் 72 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
குற்றால அருவிகளில் இன்று (அக்டோபர் 25) குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!
அதன்பின்னர் இறங்கிய விராட் கோலி டக் அவுட்டானார். இந்தியா 45.3 ஓவரில் 156 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. வாஷிங்டன் சுந்தநர் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 103 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர் – முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!
தவெக மாநாட்டில் தமிழ்த்தாய்க்கு கட் அவுட் – முழு தகவல் இதோ !
2025 ஏப்ரல் முதல் சென்னையில் மின்சார பேருந்துகள்
பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம்