Home » செய்திகள் » தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் முக்கிய தகவல்!

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் முக்கிய தகவல்!

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் முக்கிய தகவல்!

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சில குறிப்பிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேலும் கனமழை அதிகமாக பெய்யும் இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து வருகிறார். இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலின் மேல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாடு,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய கூடும்.

புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் – நியூசிலாந்து 255 ரன்னில் ஆல் அவுட் – இந்தியாவிற்கு 359 டார்கெட்! 

குறிப்பாக தமிழகத்தில்  தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி,  மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதே போல் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top