தவெக தலைவர் விஜய்யின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பும் ஆதரவும் - இணையத்தில் குவியும் கருத்துக்கள்!தவெக தலைவர் விஜய்யின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பும் ஆதரவும் - இணையத்தில் குவியும் கருத்துக்கள்!

தவெக தலைவர் விஜய்யின் பேச்சு: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று (27.10.2024) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் 3 லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் தலைவர் விஜய், கட்சியின் கொள்கைகளை வெளியிட்டார். அதுமட்டுமின்றி, அவர் பேசுகையில் பாஜக தனது சித்தாந்த எதிரி என்றும், திமுக தனது அரசியல் எதிரி எனவும் தைரியமாக பேசியுள்ளார். இந்நிலையில் அவர் பேசியதை சிலர் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தாலும், பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.  

தவெக தலைவர் விஜய்யின் பேச்சு

அதன்படி, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை என்பதை வரவேற்பதாகவும், நீட், ஆளுநர் விவகாரங்களில் விஜயின் கொள்கைகளை ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜயின் கொள்கைகளும் எங்களது கொள்கைகளும் நேர் எதிரானது எனவும், எனவே விஜயுடன் கூட்டணி இல்லை எனவும்  கூறியுள்ளார். ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், தமிழ்நாட்டில் எந்த கட்சி அகற்றப்பட வேண்டும் என்பதை விஜய் துணிவுடன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி 2024 மளிகைப் பொருட்கள் சிறப்பு தொகுப்பு – அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு! இவ்வளவு இருக்கா?

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் விகிதாச்சார இட ஒதுக்கீடு தான் உண்மையான சமூக நீதி என குரல் எழுப்பிய விஜய்க்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் கட்சி கொடியுடன்  விஜய்யின்  படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து , ‘புதிய பயணத்திற்கு வாழ்த்துகள் செல்லம்’ என்று அவருடைய பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் இயக்குனர் பா ரஞ்சித், சாதி, மத, வர்க்க பிரிவினைக்கும், ஊழலுக்கு எதிராக செயல்பட போவதாக விஜய் கூறியதை, வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார். 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய் 

புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் – நியூசிலாந்து 255 ரன்னில் ஆல் அவுட்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானங்களில் சிறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *