Home » செய்திகள் » விஜய்யை சீண்டிய பிரபல நடிகர் ! உன் கூட அரசியலா என கருத்து !

விஜய்யை சீண்டிய பிரபல நடிகர் ! உன் கூட அரசியலா என கருத்து !

விஜய்யை சீண்டிய பிரபல நடிகர் ! உன் கூட அரசியலா என கருத்து !

தற்போது நடந்து முடிந்த தவெக மாநாட்டை தொடர்ந்து விஜய்யை சீண்டிய பிரபல நடிகர் போஸ் வெங்கட் அந்தவகையில் பல்வேறு தரப்பிலிருந்தும் விஜய்யின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினர்.

அந்த வகையில் கட்சிக்கான கொடி மற்றும் சின்னத்தை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி சாலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில நேற்று நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக்கழகத்தின் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கிட்ட தட்ட 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் இந்த தவெக மாநாட்டில் பங்கேற்றுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், பெரியார், காமராஜர், அம்பேத்கர் மற்றும் வேலுநாச்சியார், அஞ்சலையம்மாளை தங்களின் கொள்கை தலைவர்கள் என்றும், சாதி, மத , பிரிவினைவாத சக்திகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் என தெரிவித்தார்.

அத்துடன் தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள திராவிட முன்னேற்ற கழகத்தை நேரடியாக தாக்கி பேசினார். அந்த வகையில் ஊழல் வாதிகளும், குடும்ப அரசியல் செய்வர்களும் தான் எங்களின் அரசியல் எதிரிகள் என தெரிவித்தார்.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய் பேசிய கருத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

தலைவர் விஜய் சொன்ன சிறு வயது பாண்டிய மன்னன் யார்? முழு விவரம் உள்ளே!

தவெக மாநாடு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் போஸ் வெங்கட் விஜய்யின் பேச்சை தற்போது கிண்டல் செய்துள்ளார்.

இதையடுத்து தனது எக்ஸ் தள பதிவில், யப்பா..உன் கூடவுமா அரசியல் பண்ணனும். பாவம் அரசியல். பள்ளிக்கூட ஒப்பிப்பு. சினிமா நடிப்பு மற்றும் அதீத நியாபக சக்தி. வியப்பு. எழுதிக்கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன். முடிவு.. பார்பபோம் என கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top