2025ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2026 ஆண்டில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் தேர்தலுக்கு முக்கிய ஆவணமாக வாக்காளர் அடையாள அட்டை இருந்து வருகிறது. மேலும் ஒவ்வொரு வருடமும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது.
2025ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
அதற்கு முன்னர் வரைவு வாக்காளர் பட்டியல் அரசு சார்பாக வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026ல் வரும் ஜனவரி 1ம் தேதியை முன்னிட்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்காக புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட இருக்கிறது. எனவே இதற்கு முன்பு பழைய வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டும் என்பதால் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 2025-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் புதிய வரைவு வாக்காளர்கள் பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டுள்ளனர்.
டிஜிட்டல் ‘CONDOM’ ஆப் வந்தாச்சு – எல்லாம் டெக்னாலஜி – ஆனா இது புதுசா இருக்குனே!
குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் கிட்டத்தட்ட 16 சட்டமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில் சுமார் 19.41 லட்சம் ஆண்கள், 20.09 லட்சம் பெண் வாக்காளர்கள் இருக்கின்றனர். எனவே சென்னையில் மொத்தம் 39,52,498 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய்
புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் – நியூசிலாந்து 255 ரன்னில் ஆல் அவுட்
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானங்களில் சிறப்பு