விற்பனைவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் STAT சார்பில் தமிழ்நாடு அரசின் வணிகவரித்துறை வேலைவாய்ப்பு 2024 மூலம் காலியாக உள்ள 25 அலுவலக உதவியாளர், ஓட்டுநர் , இரவுக்காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பின் பெயர் | தமிழ்நாடு அரசு வணிகவரித்துறை |
காலியிட அறிவிப்பு எண் | STAT 01 / 2024 |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 25 |
வேலை இடம் | சென்னை, கோவை , மதுரை |
தொடக்க தேதி | 28.10.2024 |
கடைசி தேதி | 11.11.2024 |
இணையதளம் | https://ctd.tn.gov.in/home |
துறையின் பெயர் :
தமிழ்நாடு அரசு வணிகவரித்துறை
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை :
அலுவலக உதவியாளர் – 18
ஓட்டுநர் – 02
இரவுக்காவலர் – 02
துப்புரவு பணியாளர் – 02
இரவுக்காவலருடன் கூடிய துப்புரவு பணியாளர் – 01
மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை – 25
மாத சம்பளம் :
Rs.15,700 முதல் Rs.58,100 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசின் வணிகவரித்துறை வேலைவாய்ப்பு 2024 அடிப்படை தகுதிகள் :
மேற்கண்ட அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக ஓட்டுநர் பணிகளுக்கு இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
இரவுக்காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் பதவிகளுக்கு தமிழ் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
STAT வயது வரம்பு :
பொதுப்பிரிவினருக்கு – 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 18 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள் – 18 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி முன்னாள் படை வீரர்களுக்கு வயது வரம்பு 53 வரை தளர்வு உண்டு
மாற்று திறனாளிகளுக்கு ௧௦ ஆண்டுகள் வயது உச்ச வரம்பு தளர்வு உண்டு.
STAT பணி அளிக்கப்படும் இடம் :
சென்னை,
கோவை ,
மதுரை
தமிழ்நாடு அரசின் வணிகவரித்துறை ஆட்சேர்ப்பு 2024 விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு அரசு வணிகவரித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கம் செய்து கல்வி சான்றிதழ்களுடன் மற்றும் தேவையான சான்றிதழ்களில் சுயகையொப்பமிட்டு தெரிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
தலைவர்,
தமிழ்நாடு விற்பனைவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், 2 வது தளம்,
மாநகர உரிமையியல் நீதிமன்ற கட்டிடம், உயர்நீதிமன்ற வளாகம்,
சென்னை – 104
TNSWD ஆட்சேர்ப்பு 2024 ! WHL பெண்கள் உதவி மையத்தில் பணியிடம் – நேர்காணல் மட்டுமே !
தேர்வு செய்யும் முறை :
வேட்பாளர்களின் குறுகிய பட்டியல்
நேர்காணல்
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
STAT ஆட்சேர்ப்பு 2024 குறிப்பு :
பரிசீலனையின் போது விண்ணப்பதாரகள் தெரிவித்த தகவல்களில் ஏதேனும் தவறு கண்டரையப்பட்டால் இருந்தால் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.
இருசக்கர வானம் ஓட்ட தேர்ந்தவராகவும், அத்துடன் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் பதிவஞ்சல் மற்றும் விரைவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பின்னர் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மாற்று திறனாளி முன்னுரிமை கோருபவராக இருந்துள்ள மாவட்ட மாற்று திறனாளி நல அலுவலரால் வழங்கப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இதனையடுத்து வேட்பாளர்கள் அஞ்சல் மூலம் அனுப்பும் விண்ணப்பம் தாமதமாக வந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பாகாது.
அத்துடன் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் எந்தவொரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு
மேலும் நேர்காணலுக்கான அழைப்பு கடிதம் பெறுவது மட்டுமே வேலைக்கான உத்தரவு என்று கருதக்கூடாது.
இதனை தொடர்ந்து நேர்காணல் செய்யும் தேதி மற்றும் நேரம் மறுதலுக்குட்பட்டது.
மேலும் பதவிகள் தொடர்பாக எந்த விதமான சிபாரிசுகளும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒரே பதவிக்கு விண்ணப்பிக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் அதற்கான சான்றிதழ்களுடன் தனித் தனியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
SKSPREAD வருமான வரித்துறை வேலைவாய்ப்பு
Coal India limited ஆட்சேர்ப்பு 2024 ! 640 Management Trainee பணியிடம் அறிவிப்பு
DRDO ஆட்சேர்ப்பு 2024: பல்வேறு பதவிகளுக்கு இப்போதே விண்ணப்பிக்கவும்
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் ஆட்சேர்ப்பு 2024: 585 அப்ரண்டிஸ் பயிற்சியாளர், தகுதி அளவுகோல்கள்
DVC ஆட்சேர்ப்பு 2024: பல GDMO பதவிகளுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது
இந்திய துறைமுக சங்க ஆட்சேர்ப்பு 2024: பல பதவிகளுக்கான புதிய அறிவிப்பு