தீபாவளி 2024 ரூ. 438 கோடிக்கு மது விற்பனை: பொதுவாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மது விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
தீபாவளி 2024 ரூ. 438 கோடிக்கு மது விற்பனை
அந்த வகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளிக்கு முதல் நாள் தேவர் ஜெயந்தி என்பதால் இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தீபாவளி நாள் அன்று மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
அதன்படி, சென்னையில் கடந்த 30ம் தேதி ரூ.47.16 கோடிக்கும், தீபாவளி அன்று 31ம் தேதி ரூ.54.18 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டது. மதுரையில் 30ம் தேதி ரூ.40.88 கோடி, 31ம் தேதி ரூ.47.73 கோடிக்கும், சேலத்தில் 30ம் தேதி ரூ.38.34 கோடி, 31ம் தேதி ரூ.45.18 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டது.
தீபாவளி அக்டோபர் 31ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!
கோவையில் 30ம் தேதி ரூ.36.40 கோடி, 31ம் தேதி ரூ.42.34 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டது. அதே போல திருச்சியில் 30ம் தேதி ரூ.39.81 கோடி, 31ம் தேதி ரூ.46.51 கோடிக்கும் விற்பனை ஆகியுள்ளது.
செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய்
புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் – நியூசிலாந்து 255 ரன்னில் ஆல் அவுட்
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானங்களில் சிறப்பு