கூகுளுக்கு போட்டியாக களமிறங்கிய OpenAI - ஜெனரேட்டிவ் ஏஐ அறிமுகம் செய்துள்ளது !கூகுளுக்கு போட்டியாக களமிறங்கிய OpenAI - ஜெனரேட்டிவ் ஏஐ அறிமுகம் செய்துள்ளது !

தற்போது கூகுளுக்கு போட்டியாக களமிறங்கிய OpenAI , இதனை தொடர்ந்து முன்னணி உலக செய்தி நிறுவனங்களுடன் இணைந்து சாட்ஜிபிடி-யில் இணையதளத்தில் தேடும் வகையில் வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் தேடுபொறிக்கு போட்டியாக, தற்போது ChatGPTல் இணையதள தேடலை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். அந்த வகையில் கடந்த 2022 ம் ஆண்டின் இறுதியில் OpenAI நிறுவனம் சாட்-ஜிபிடி எனும் ‘ஜெனரேட்டிவ் ஏஐ’ சாட்பாட்டை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இது டிஜிட்டல் உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போதைக்கு இந்த இணையதள தேடல் சேவையை சந்தா கட்டணம் செலுத்தி மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலையில் விரைவில் அனைவரின் பயன்பாட்டுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. OpenAI launched SearchGPT has to compete with Google

அத்துடன் இதன் ‘ப்ரிவியூ வெர்ஷன்’ கடந்த ஜூலையில் SearchGPT என்ற பெயரில் மாதிரி வடிவமாக வெளியானது. அந்த வகையில் அதனை 10 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பயன்படுத்த முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து முன்னணி உலக செய்தி நிறுவனங்களுடன் இணைந்து சாட்ஜிபிடி-யில் இணையதளத்தில் தேடும் வகையில் வடிவமைத்துள்ளதாக பிளாக் பதிவில் OpenAI நிறுவனம் தெரிவித்தது.

பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட காரணங்கள் என்ன? – முழு விவரம் உள்ளே!

அதுமட்டுமல்லாமல் ‘சாட்பாட்’ தரும் தகவல்களும் இதில் இடம்பெறும். மொத்தத்தில் கூகுளுக்கு போட்டியாக இணைய உலகில் ஓபன் ஏஐ களம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பயனர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே இதன் ‘ரீச்’ இருக்கும். அத்துடன் chatgpt.com மூலம் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் செயலியில் இதனை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *