கந்த சஷ்டி விரதம் 2024: தமிழ் கடவுளான முருகப் பெருமானை பல கோடி பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். அதிலும் சில பேர் முருகனுக்கு விரதம் இருந்து வழிபடுவார்கள். குறிப்பாக கந்தசஷ்டி முருகனுக்கு மிகவும் முக்கியமான நாள் ஆகும். பொதுவாக மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும் ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி ‘கந்தசஷ்டி’ விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கந்த சஷ்டி விரதம் 2024
குறிப்பாக 6 நாட்களில் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இன்று முதல் தொடங்கும் இந்த கந்தசஷ்டி விரதம் இறுதியில் 6வது நாள் முருகப்பெருமான் ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். எனவே அந்த 6 நாட்கள் விரதம் இருப்பவர்கள் குழந்தை வரம் வேண்டி முருகனை நினைத்து விரதம் இருக்க முருகனே குழந்தையாக பிறப்பார் என்பது ஐதீகம். எனவே விரதம் எப்படி இருக்க வேண்டும் என்று பலருக்கும் தெரியவில்லை. எனவே வீட்டில் இருந்து எப்படி விரதம் இருக்கலாம் என கீழே பார்க்கலாம்.
வீட்டில் விரதம் இருப்பது எப்படி?
தங்களுடைய வீட்டில் விரதம் இருக்க நினைக்கும் நபர்கள் அதிகாலையில் குளித்து முடித்து தமிழ் கடவுள் முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்க வேண்டும். இதையடுத்து அருகாமையில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வரலாம்.
2025 புத்தாண்டு ராசிபலன்கள்: அதிர்ஷ்டத்தை அள்ள போகும் 5 ராசிகள்!!
மேலும் வீட்டிலேயே முருகனின் பாமாலைகளைப் பாடலாம் கந்த சஷ்டி, திருப்புகழ் உள்ளிட்ட முருகனின் சிறப்புகளை உணர்த்தும் பாடலை படிக்கலாம்.
அதுமட்டுமின்றி ஒரு சிலர் ஆறு நாட்கள் விரதம் இருக்க வேண்டும். 6 நாட்கள் கடைபிடிக்க முடியவில்லை என்றால் கந்தசஷ்டி தினத்தன்று ஒரு நாள் மட்டுமாவது விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
சூரிய பெயர்ச்சி ஆடி மாத பலன்கள் 2024
திருப்பதிக்கு போறீங்களா – அப்ப இதுக்கு அனுமதி இல்லை
ஆடி மாதம் இலவச ஆன்மீக சுற்றுலா 2024 !
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா 2024