தற்போது கேரளாவில் ரயில் மோதி 4 தமிழர்கள் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் தங்கி ரயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக வேலைபார்த்து வந்தனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. train collision in Kerala 4 Tamils killed incident occurred during the cleaning work
கேரளாவில் ரயில் மோதி 4 தமிழர்கள் உயிரிழப்பு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கேரளா :
கேரள மாநிலம் பாலக்காடு அருகே ரயில் மோதிய விபத்தில் தமிழர்கள் 4 பேர் உயிரிழந்தனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் கேரளாவில் தங்கி ரயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக வேலைபார்த்து வந்தனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ரயில் விபத்து :
இதனையடுத்து ஷொர்ணுார் பகுதியில், பாரதபுழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் அருகில் உள்ள குப்பைகளை அவர்கள் அகற்றி கொண்டிருந்தனர். அப்போது டில்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு ரூ. 438 கோடிக்கு மது விற்பனை – அடேங்கப்பா படத்தோட வசூலை விட அதிகமா இருக்கே!
இந்த விபத்தில் சிக்கிய நான்கு பேரும் அருகில் உள்ள ஆற்றில் தூக்கி வீசப்பட்ட நிலையில் 4 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் 3 பேரின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டது.
மேலும் அதில் இரண்டு பேர் சேலத்தை சேர்ந்த லட்சுமணன், வள்ளி என தெரியவந்துள்ளது. மற்றவர்கள் பற்றிய விபரம் வெளியாகவில்லை.
சமீபத்திய செய்திகள் :
திருமாவளவன் – விஜய் ஒன்றாக பங்கேற்கும் நிகழ்ச்சி ? – முழு விவரம்
கூகுளுக்கு போட்டியாக களமிறங்கிய OpenAI – ஜெனரேட்டிவ் ஏஐ அறிமுகம்
தீபாவளியை முன்னிட்டு ரூ. 438 கோடிக்கு மது விற்பனை
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை – 2 ஊருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!
TVK தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் – எப்போது
பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட காரணங்கள் என்ன? – முழு விவரம் !