தமிழகத்தில் 316 முதுநிலை மருத்துவர்கள் தலைமறைவு: தமிழகத்தில் ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக தற்போது வரை போராடி வருகின்றனர். இருந்தாலும் மாணவர்கள் தொடர்ந்து போராடி தேர்வை எழுதி வருகின்றனர். UG மற்றும் PG என இரண்டையும் தேர்வு எழுதி தான் மாணவர்கள் மருத்துவர் கல்லூரி சீட்டை பிடிக்கின்றனர்.
தமிழகத்தில் 316 முதுநிலை மருத்துவர்கள் தலைமறைவு
இந்நிலையில் முதுநிலை மருத்துவர்கள் அரசு பணியில் இருந்து தலைமறைவாகி வருகிறார்கள் என இணையத்தில் செய்திகள் வெளியாகி வருகிறது. பொதுவாக தமிழகத்தில் இருக்கும் முதுநிலை மருத்துவர்கள் கட்டாயமாக அரசு பணியில் பணியாற்ற வேண்டும் என்ற விதி இருக்கிறது. அப்படி இந்த விதியை ஒத்துக் கொண்டு வருபவர்களுக்கு, நீட் தேர்வில் ஊக்க மதிப்பெண் இருக்கிறது.
அதுமட்டுமின்றி இட ஒதுக்கீடு இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதை அரசு கொண்டு வர காரணம், அரசு பொது மருத்துவமனையை வலுப்படுத்தவும், எல்லா இடங்களிலும் மருத்துவம் பரவலாக கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் கொண்டு வரப்பட்டது. இப்படி இருக்கையில் முதுநிலை மருத்துவர்கள் தலைமறைவாகி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை – 2 ஊருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!
குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் (DME&R) கீழ் உள்ள 21 பொது சுகாதார நிறுவனங்களில் இருந்து 144 மருத்துவர்கள் தலைமறைவாகியுள்ளனர். அதுமட்டுமின்றி DME&R கீழ் உள்ள சுகாதார நிறுவனங்களில் மட்டும் 316 மருத்துவர்கள் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய்
புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் – நியூசிலாந்து 255 ரன்னில் ஆல் அவுட்
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு