டிஎன்பிஎஸ்சி குரூப் 4: தட்டச்சு - சுருக்கெழுத்து சான்றிதழ் இருக்கா? அப்ப இத முதல பண்ணுங்க!டிஎன்பிஎஸ்சி குரூப் 4: தட்டச்சு - சுருக்கெழுத்து சான்றிதழ் இருக்கா? அப்ப இத முதல பண்ணுங்க!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4: தட்டச்சு – சுருக்கெழுத்து சான்றிதழ்: TNPSC எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு  அரசு துறைகளில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்ப பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது.  சமீபத்தில் கூட  8,932 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடைபெற்றது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4: தட்டச்சு – சுருக்கெழுத்து சான்றிதழ்

இந்த தேர்வை கிட்டத்தட்ட 15.8 லட்சம் பேர் எழுதினர். இதனை தொடர்ந்து TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் 28ம் தேதி வெளியானது.

மேலும் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை நேற்று தேர்வாணையம் வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் TNPSC குரூப் 4 தேர்வு எழுத போகும் மாணவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, அரசாங்க தேர்வை எழுதுவதற்கு முன்னரே பெரும்பாலான மாணவர்கள் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து போன்றவைகளை முறைப்படி கற்று கொண்டு தேர்வு எழுதி அரசாங்க சான்றிதழ்களை கைப்பற்றி வருகின்றனர். முன்பெல்லாம் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகிய பின்னர் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதியை தேர்வாணையம் வைத்திருந்தது.

தமிழகத்தில் 316 முதுநிலை மருத்துவர்கள் தலைமறைவு – வெளியான ஷாக்கிங் தகவல்!

ஆனால் இப்பொழுது வெளியீட்டு இருக்கும் அறிவிப்பில், தேர்வு குறித்த அறிவிக்கை(Notification) தேதி வெளியான பின்னர் வழங்கப்படும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து சான்றிதழ் ஏற்றுக்கொள்ள படமாட்டாது. மேலும் அப்படி தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து சான்றிதழ் அறிவிக்கை(Notification) தேதிக்கு முன்னர் பெற்றவர்கள் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் அதற்கான ஆதார சான்றிதழை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.  

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய் 

புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் – நியூசிலாந்து 255 ரன்னில் ஆல் அவுட்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *