ipl 2026ல் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்: 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு 2025ல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்த கிரிக்கெட் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. எனவே IPL 2025 யை முன்னிட்டு வீரர்களை தேர்ந்தெடுக்கும் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தக்கவைக்கப்பட்ட வீரர்களை பட்டியலை வெளியிட வேண்டும் என்று அறிவித்திருந்தது.
அதன்படி தீபாவளி பண்டிகை அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 பேரை தக்க வைத்து அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. எனவே சிஎஸ்கே அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மதீஷ் பத்திரனா, எம்.எஸ் தோனி ஆகியோர் தங்கவைக்கப்பட்டனர். இதன் மூலம் அடுத்த ஆண்டு எம் எஸ் தோனி விளையாடுவது உறுதியாகிவிட்டது.
ipl 2026ல் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்
இதனால் ரசிகர்கள் குஷியாக இருந்து வருகின்றனர். ஆனால் 2026ல் தோனி விளையாடுவாரா என்று இப்போதே பலரும் கேள்வி எழுப்ப தொடங்கி விட்டன. இப்படி இருக்கையில், MS தோனிக்கு அடுத்தபடியாக சென்னை அணியில் விக்கெட் கீப்பிங் பொறுப்பை கவனிக்க நல்ல வீரரை சென்னை அணி நிர்வாகம் தேடி வருகிறது.
TVK கட்சி தலைவர் விஜய் தொடங்கும் டிவி சேனல்? பெயர் என்ன தெரியுமா? அனல் பறக்கும் அரசியல் களம்!
இந்நிலையில் MS தோனி இடத்தை நிரப்ப ஒரு வீரரை சென்னை அணி நிர்வாகம் தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, எம்.எஸ் தோனிக்கு பின் சென்னை அணியின் பிரதான விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர் இதற்கு முன்னர் டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த நிலையில் தற்போது நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய்
புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் – நியூசிலாந்து 255 ரன்னில் ஆல் அவுட்
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு